ஆப்கானிஸ்தானில் காரில் குண்டு வைத்து கவர்னர் படுகொலை

காபூலின் துணை கவர்னர் மஹபூபுல்லா மொஹேபியை கொலை செய்யும் நோக்கில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

காபூல்:

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. முடிவில்லாமல் நீண்டு கொண்டே இருக்கும் இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ஆப்கானிஸ்தான் அரசும், தலீபான் பயங்கரவாத அமைப்பு கடந்த செப்டம்பர் மாத இறுதியிலிருந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் இதில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக தலைநகர் காபூல் தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காபூலின் துணை கவர்னர் மஹபூபுல்லா மொஹேபியை கொலை செய்யும் நோக்கில் பயங்கரவாதிகள் அவரது காரில் வெடிகுண்டு மறைத்து வைத்தனர். நேற்று காலை மஹபூபுல்லா மொஹேபி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் ரிமோட் மூலம் காரில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதில் மஹபூபுல்லா மொஹேபி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். மேலும் அவரது பாதுகாவலர் ஒருவரும் உயிரிழந்தார். 2 பாதுகாவலர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com