ரூ.4,837 கோடி வங்கி மோசடி : ஐதராபாத் நிறுவன அதிபர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு

பாரத ஸ்டேட் வங்கியின் புகாரின் பேரில் ஐதராபாத் நிறுவன அதிபர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
சி.பி.ஐ.
சி.பி.ஐ.
Published on

புதுடெல்லி:

ஐதராபாத்தைச் சேர்ந்த ஐ.வி.ஆர்.சி.எல். என்ற உள்கட்டமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதிர் ரெட்டி, இணை நிர்வாக இயக்குனர் பலராமி ரெட்டி. இவர்கள், வங்கிகள் கூட்டமைப்பில் இருந்து ரூ.4,837 கோடி அளவுக்கு கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் புகாரின் பேரில், சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து நேற்று, இந்நிறுவன வளாகம் மற்றும் நிறுவன அதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தியது. அதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சி.பி.ஐ. செய்தித்தொடர்பாளர் ஆர்.சி.ஜோ‌ஷி தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com