மருத்துவ மாணவர் சேர்க்கை- வெளிமாநிலத்தவர் 218 பேர் விண்ணப்பம்

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த 218 பேர் விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது. ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கலந்தாய்வை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 பேர் தமிழக கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பித்திருப்பதாகவும், அவர்களின் பெயர்கள் அரசு ஒதுக்கீட்டிற்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

போலியான ஆவணங்கள் மூலம் மருத்துவ படிப்புகளில் சேருவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர்தான் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com