தமிழ்நாடு கவர்னர் வித்யாசாகர்ராவ் மே தின வாழ்த்து

உழைப்பாளர் தின கொண்டாட்டங்கள் உழைக்கும் வர்க்கத்தின் மீதான நமது ஆழ்ந்த நம்பிக்கை, மரியாதை மற்றும் கவுரவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக தமிழ்நாடு கவர்னர் வித்யாசாகர்ராவ் கூறியுள்ளார்.
தமிழ்நாடு கவர்னர் வித்யாசாகர்ராவ் மே தின வாழ்த்து
Published on

சென்னை:

தமிழ்நாடு கவர்னர் வித்யாசாகர்ராவ் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

உழைப்பாளர் தின கொண்டாட்டங்கள் உழைக்கும் வர்க்கத்தின் மீதான நமது ஆழ்ந்த நம்பிக்கை, மரியாதை மற்றும் கவுரவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. அவர்கள் தங்களது அருஞ்செயல்கள் மூலம் செயல்பாடுகளை உருவாக்கி வருகின்றனர்.

இப்புதிய நவீன யுகத்தில் வேலை திறன் வியக்கதக்க வகையில் பல மாற்றங்களை கண்டு வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தொழிலாளர்களும், நிறுவனங்களும் உலகமயமாக்கல் முறைக்கு மாறி வருகின்றன. எனவே உழைக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பு, மற்றும் சுகாதார மான சுற்றுச் சூழல் போன்றவற்றை முன்பைவிட மேம்படுத்துவோம். இந்த மே தின நாளில் தொழிலாளர்களுக்கு எனது மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com