தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.
ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாதையன் தலைமை தாங்கினார். 

இதில் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம், அம்மா திட்டம், முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் ஆகியவைகளில் வீட்டுமனை வேண்டி விண்ணப்பித்த அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்கள் அனைவருக்கும் அன்ன யோஜன அந்தியோதியா திட்டத்தின்கீழ் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com