தாம்பரம் அருகே மணல் லாரி மோதி ஆசிரியர் பலி

தாம்பரம் அருகே மணல் லாரி மோதிய விபத்தில் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான ஆசிரியர் சந்தோஷ்.
பலியான ஆசிரியர் சந்தோஷ்.
Published on

ஸ்ரீபெரும்புதூர்:

தாம்பரத்தை அடுத்த தர்காஸ் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (29).

இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை தனது நண்பர் ரஞ்சித் குமாருடன் படப்பைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

கரசங்கால் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு மணல் லாரி வேகமாக வந்தது.

கண்இமைக்கும் நேரத்தில் அந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஆசிரியர் சந்தோஷ் உடல் நசுங்கி உயிர் இழந்தார்.

படுகாயம் அடைந்த ரஞ்சித் குமார் குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மணல் லாரி டிரைவர் லாரியை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். அவரை குரோம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தேடி வருகிறார்.

விபத்தில் மரணம் அடைந்த ஆசிரியர் சந்தோஷ் மனைவி பெயர் பார்கவி. இவர்களுக்கு திருமணம் முடிந்து 10 மாதங்கள்தான் ஆகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com