ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் தாக்குதலில் 13 போலீசார் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் கன்டுஸ் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியின் மீது இன்று தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 போலீசார் உயிரிழ்ந்தனர்.
ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் தாக்குதலில் 13 போலீசார் பலி
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் கன்டுஸ் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியின் மீது இன்று தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 போலீசார் உயிரிழ்ந்தனர்.

சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் முகாமிட்டிருந்த பன்னாட்டு ராணுவப் படைகள் கடந்த 2014-ம் ஆண்டு திரும்பப்பெற்ற பின்னர் அங்கு தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் தீவிரவாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர்மீது அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் தலிபான்கள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் இருநூறுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் கன்டுஸ் மாகாணத்திற்குட்பட்ட கான் அபாட் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடியின் மீது இன்று அதிகாலை தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 போலீசார் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் மட்டும் உயிர் பிழைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com