திறமையான அதிகாரிகளுக்கு காவல்துறையில் பற்றாக்குறை இல்லை: சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி

காணாமல்போன 41 வழக்கு ஆவணங்களில் 23 ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Published on

சிலைக் கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானது பற்றி ஓய்வுபெற்ற காவல் அதிகாரி மூலம் விசாரிக்க கோரி யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் அறிக்கை ஒன்று தாக்கல் செய்தார். அதில் ‘‘காணாமல்போன 41 வழக்கு ஆவணங்களில் 23 ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திறமையான அதிகாரிகளுக்கு காவல்துறையில் பற்றாக்குறை இல்லை’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com