கீரைத்துறையில் தூக்குப்போட்டு டெய்லர் தற்கொலை

கீரைத்துறையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த டெய்லர் தூக்குப்போட்டுதற்கொலை செய்து கொண்டார்.
கீரைத்துறையில் தூக்குப்போட்டு டெய்லர் தற்கொலை
Published on

மதுரை:

மதுரை கீரைத்துறை வட்டக்குழி கிணறு சந்து பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் பிரதீபன் (வயது26), டெய்லர். இவருக்கு குடி பழக்கம் இருந்தது.

அடிக்கடி மது அருந்தியதால் தீராத வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த பிரதீபன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கீரைத்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com