செய்யாறு அருகே டெய்லரை கழுத்து நெரித்து கொன்ற கள்ளக்காதலி

செய்யாறு அருகே டெய்லரை கழுத்து நெரித்து கொன்ற கள்ளக்காதலியை போலீசார் கைது செய்து செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்யாறு அருகே டெய்லரை கழுத்து நெரித்து கொன்ற கள்ளக்காதலி
Published on

செய்யாறு:

வேலூர் மாவட்டம் நெமிலி அடுத்த சிறுவளையத்தை சேர்ந்தவர் சிட்டிபாபு (45) டெய்லர். இவருக்கும் பெங்களூரை சேர்ந்த அலமேலு என்பவருக்கும் திருமணம் நடந்தது. கணவன் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அலமேலு தனது தாய் வீடான பெங்களூருக்கு சென்று விட்டார். 

வெம்பாக்கம் அடுத்த பிரம்மதேசம் புதூர் காலனியை சேர்ந்த மஞ்சுளா (42) என்பவருக்கும் சிறு வளையத்தை சேர்ந்த மாரி என்பவருக்கும் திருமணமாகி ஒரு மகன் உள்ளான்.

மஞ்சுளாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மாரி மஞ்சுளாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் மஞ்சுளா தனது தாய் வீடான பிரம்மதேசம் புதூருக்கு வந்து விட்டார்.

சிறுவளையம் கிராமத்தில் இருந்த போதே மஞ்சுளாவுக்கும், சிட்டிபாபுவுக்கும் கள்ள காதல் ஏற்பட்டுள்ளது.

மஞ்சுளா வீட்டிற்கு சிட்டி பாபு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மஞ்சுளா வீட்டிற்கு சிட்டிபாபு சென்றார்.

நேற்றிரவு மஞ்சுளாவும் சிட்டிபாபுவும் பிரம்மதேசம் புதூர் அருகேயுள்ள சிறுநாவல் பட்டு ஆற்றங்கரை யோரம் உள்ள பம்ஹவுஸ் அருகே சென்றனர்.

அப்போது மஞ்சுளா சிட்டிபாபுவிடம் என்னை விட்டு வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருக்கிறாய் என கேட்டு தகராறு செய்தார்.

இதனால் இருவரும் கை கலப்பில் ஈடுபட்டனர். அப்போது மஞ்சுளா சிட்டிபாபுவின் கழுத்தை கயிற்றால் இருக்கியுள்ளார். இதில் மூச்சு திணறி சிட்டிபாபு அங்கேயே இறந்து விட்டார்.

இது குறித்து தகவலறிந்த பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு மஞ்சுளாவை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com