மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் டெய்லர் தீக்குளித்து தற்கொலை

மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் மனமுடைந்த டெய்லர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on

சின்னசேலம்:

சின்னசேலம் அருகே பெரிய சிறுவத்தூர் கிராமம் மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் கண்ணாமணி(வயது 58). இவர் வீட்டோடு டெய்லர் கடை நடத்தி வந்தார். அமுதா என்ற மனைவியும், பரத்குமார்(18) என்ற மகனும், பவித்ரா(16) என்ற மகளும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கிய கண்ணாமணிக்கு இடுப்பு எலும்பு நகன்றதை அடுத்து அவரால் நடக்கமுடியாமல் போனதோடு தையல் தொழில் செய்ய முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் குடிபோதைக்கு அடிமையாகி தினமும் மது குடித்து வந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கண்ணாமணியின் மனைவி அமுதா கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அமுதாவிடம் கண்ணாமணி மதுகுடிக்க பணம் கேட்டார். ஆனால் அவரோ பணம் தர மறுத்துவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்த அமுதா சமையல் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது வீட்டின் முன்புறம் உள்ள மந்தைவெளியில் கண்ணாமணி அவரது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில் வெப்பம் தாங்க முடியாமல் அவர் அலறினார். இந்த சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்த அமுதா மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்து கண்ணாமணியின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

பின்னர் அவரை கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கண்ணாமணி பரிதாபமாக இறந்தார். மது குடிக்க மனைவி பணம் தராததால் கண்ணாமணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com