ஆஸ்திரேலிய ஓபன்: நம்பர் வீராங்கனையிடம் வீழ்ந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார் பிவி சிந்து

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து நம்பர் ஒன் வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.
ஆஸ்திரேலிய ஓபன்: நம்பர் வீராங்கனையிடம் வீழ்ந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார் பிவி சிந்து
Published on
சிட்னி நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டிகளில் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பிவி சிந்து, உலகின் நம்பர் ஒன் வீராங்கனையைான சீனதைபேயின் தாய் சு யிங்-ஐ எதிர்கொண்டார்.



முதல் சுற்றில் பிவி சிந்து 21-10 என எளிதில் வெற்றி பெற்றார். 2-வது சுற்றில் சீனதைபே வீராங்கனை சிறப்பாக வீசினார். இதற்கு பிவி சிந்தும் ஈடுகொடுத்து விளையாடினார். இறுதியில் சீனதைபே வீராங்கனை 22-20 என வெற்றி பெற்றார். மேலும், 3-வது செட்டை 21-16 எனக்கைப்பற்ற பிவி சிந்து 1-2 என தோல்வியடைந்து காலிறுதியோடு ஆஸ்திரேலிய ஒபனில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com