திண்டுக்கல் மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தாசில்தார்களை இடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
தாசில்தார்கள் இடமாற்றம்
தாசில்தார்கள் இடமாற்றம்
Published on

திண்டுக்கல்:

சென்னை தலைமை செயலகத்தில் பொதுப்பணித் துறை பிரிவு அலுவலராக பணியாற்றிய அரவிந்த் ஆத்தூர் தாசில்தாராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆத்தூர் தாசில்தாரராக இருந்த பிரபா திண்டுக்கல் முத்திரைத்தாள் தனி வட்டாட்சியராகவும், முத்திரைத்தாள் தனி வட்டாட்சியராக இருந்த சக்திவேலன் நிலக்கோட்டை ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் நிலக்கோட்டை ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியராக இருந்த பாண்டிச்செல்வி திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியராகவும், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியராக பணியாற்றிய லட்சுமி பழனி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நிலக்கோட்டை தனி வட்டாட்சியராக இருந்த யூஜின் நிலக்கோட்டை வட்டாட்சியராகவும், நிலக்கோட்டை வட்டாட்சியராக இருந்த நவனீதகிருஷ்ணன் வேடசந்தூர் தனி வட்டாட்சியராகவும், வேடசந்தூர் தனி வட்டாட்சியராக இருந்த சிவசுப்பிரமணியன் குஜிலியம் பாறை வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குஜிலியம்பாறை வட்டாட்சியராக இருந்த காளிமுத்து நத்தம் தேசிய நெடுஞ்சாலை எண் 785 அலகு 2-ல் தனி வட்டாட்சியராகவும் அங்கு பணியாற்றிய சந்திரன் நிலக்கோட்டை தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் உடனடியாக பணி ஏற்க வேண்டும். பணி ஏற்பு மற்றும் விடுப்பு அறிக்கைகளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். புதிய பணியிடத்தில் பணி ஏற்காத தாசில்தார்கள் மீது அரசு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com