தாசில்தார் தாக்கப்பட்ட விவகாரம்: மு.க.அழகிரி ஆஜராகாததால் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் மு.க.அழகிரி ஆஜராகாததால் விசாரணை பிப்ரவரி 23-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
தாசில்தார் தாக்கப்பட்ட விவகாரம்: மு.க.அழகிரி ஆஜராகாததால் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
Published on

மேலூர்:

கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அம்பலக்காரன்பட்டி வல்லடியான் கோவிலில் அப்போதைய தாசில்தார் காளிமுத்து தாக்கப்பட்டார்.

இது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி உள்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. நீதிபதி பழனிவேலு முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணைக்கு 12 பேர் ஆஜரான நிலையில் மு.க. அழகிரி உள்பட 9 பேர் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 23-ந் தேதிக்கு நீதிபதி பழனிவேலு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com