டி 20 உலகக் கோப்பை- ஆஸ்திரேலிய அணி சாம்பியன்

மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5-வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
வெற்றி மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணியினர்.
வெற்றி மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணியினர்.
Published on

மெல்போர்ன்:

மகளிர் 20 ஓவர் உலக கோப்பையின் இறுதிப் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி, பெத் மூனி களமிறங்கினர்.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் ரன் வேகம் கணிசமாக உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 115 ரன்களை சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஹீலி அரை சதமடித்தார். அவர் 75 ரன்னில்  அவுட்டானார்.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்துள்ளது. மூனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 78 ரன்களை சேர்த்தார்.

பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய மகளிர் அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது. இதனால் 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

இந்திய மகளிர் அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 33 வேதா 19, ரிச்ச கோஷ் 18 ரன்கள் எடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com