ரெயில் டிக்கெட்டில் திருநங்கையரை குறிப்பிட அனுமதி

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அடையாளப்படுத்தும்வகையில், அவர்கள் தங்களை ‘டி‘ (டிரான்ஸ்ஜெண்டர்) என்று குறிப்பிட ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.
ரெயில் டிக்கெட்டில் திருநங்கையரை குறிப்பிட அனுமதி
Published on

புதுடெல்லி:

ரெயில் டிக்கெட் முன்பதிவு படிவங்கள், பயணிகள் தங்களை எம் (ஆண்), எப் (பெண்) என இரு பிரிவுகளில் மட்டுமே குறிப்பிடும்வகையில் இருந்தன. திருநங்கைகளுக்காக, ‘டி (ஆண்/பெண்)‘ என்ற மூன்றாவது பிரிவை கடந்த ஆண்டு ரெயில்வே அறிமுகப்படுத்தியது. இருந்தபோதிலும், திருநங்கைகள், தங்களை ஆண் அல்லது பெண் என்ற வகையிலேயே குறிப்பிட வேண்டி இருந்தது.

இந்நிலையில், திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அடையாளப்படுத்தும்வகையில், அவர்கள் தங்களை ‘டி‘ (டிரான்ஸ்ஜெண்டர்) என்று குறிப்பிட ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. ரெயில் டிக்கெட் முன்பதிவு படிவங்கள் மற்றும் முன்பதிவை ரத்து செய்யும் படிவங்களில் எம் (ஆண்), எப் (பெண்) ஆகிய 2 பிரிவுகளுடன் ‘டி‘ என்ற மூன்றாவது பிரிவையும் குறிப்பிடும்வகையில் படிவங்களை மாற்றி அமைக்குமாறு அனைத்து ரெயில்வே கோட்டங்களுக்கும் ரெயில்வே வாரியம் கடிதம் எழுதி உள்ளது.

மேலும், ரெயில்வே தகவல் சேவை மையம், சாப்ட்வேரிலும் இதுதொடர்பான மாற்றங்களை செய்யும் என்று கூறியுள்ளது. எனவே, விரைவில், ரெயில் டிக்கெட்டுகளில் திருநங்கைகள் ‘டி‘ என்ற மூன்றாவது பாலினமாக குறிப்பிடப்படுவார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com