சிரியா: ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த மேலும் ஒரு நகரை ராணுவம் மீட்டது

சிரியா நாட்டில் ஹோம்ஸ் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த அல் சுக்னா நகரை அந்நாட்டு ராணுவ வீரர்கள் இன்று மீட்டனர்.
சிரியா: ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த மேலும் ஒரு நகரை ராணுவம் மீட்டது
Published on

டமாஸ்கஸ்:

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர்.

இதுதவிர, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.

இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமைபீடமாக கருதப்படும் டேய்ர் அல்-ஸோர் மாகாணத்தின் அருகாமையில் உள்ள ஹோம்ஸ் மாகாணத்தில் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சுக்னா நகரை சிரியா ராணுவ வீரர்கள் இன்று முழுமையாக மீட்டனர்.

இந்நகரை மீட்பதற்காக நடைபெற்ற உச்சகட்டப் போரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அவர்கள் ஆயுதங்களை குவித்து வைத்திருந்த கிடங்குகள் குண்டுவீச்சில் அழிக்கப்பட்டதாகவும் சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

தீவிரவாதிகளிடம் இருந்து முன்னர் ராணுவ வீரர்களால் மீட்கப்பட்ட பழம்பெருமைமிக்க பால்மைரா நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் அல் சுக்னா அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com