சிரியாவில் ரஷ்ய ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 37 பேர் பலி

சிரியா நாட்டின் அர்பின் பகுதியில் ரஷ்ய விமானப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 37 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #SaveSyria #RussianAirStrike #ArbinAirStrike
சிரியாவில் ரஷ்ய ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 37 பேர் பலி
Published on

பெய்ரூட்:

சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்பதில் ரஷ்யாவும் இணைந்து செயல்படுகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிரியாவின் அர்பின் பகுதியில் உள்ள இன்று ரஷ்ய விமானப்படை விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டதாக என சிரியா மனித உரிமைகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 50 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்ய அரசு மறுத்துள்ளது.

இந்த தாக்குதலை நடத்தியது யார் என விசாரணை நடத்தி வருவதாக பிரட்டனை சேர்ந்த மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 20-ம் தேதி இதே பகுதியில் உள்ள பள்ளியை குறிவைத்து நடத்தப்பட்ட விமானப் படை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #SaveSyria #RussianAirStrike #ArbinAirStrike #tamilnews 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com