சிரியா: ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த மேலும் ஒரு முக்கிய நகரை அரசுப் படைகள் கைப்பற்றின

சிரியா நாட்டின் கிழக்கே யூப்ரட்டீஸ் ஆற்றங்கரையோரத்தில் உள்ள டேய்ர் எல் ஸோர் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கும் உச்சகட்டப் போரில் சிரியா படைகள் ஈடுபட்டு வந்தன.
சிரியா: ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த மேலும் ஒரு முக்கிய நகரை அரசுப் படைகள் கைப்பற்றின
Published on

சிரியா நாட்டின் கிழக்கே ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்துகின்றது. அரசுக்கு ஆதரவான குர்த் படைகளும் இந்த போரில் குதித்தன.

இதுதவிர, சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை அகற்ற நடைபெற்று வரும் ஆயுதப் புரட்சி மற்றும் அங்குள்ள போராளி குழுக்களுக்கு இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். அங்கு போராளிகள் பிடியில் இருக்கும் முக்கிய பகுதிகளை கைப்பற்றவும் அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.


இந்நிலையில், சிரியா நாட்டின் கிழக்கே யூப்ரட்டீஸ் ஆற்றங்கரையோரத்தில் உள்ள டேய்ர் எல் ஸோர் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கும் உச்சகட்டப் போரில் சிரியா படைகள் ஈடுபட்டு வந்தன. இதன் விளைவாக டேய்ர் எல் ஸோர் நகரம் முழுவதையும் ராணுவம் கைப்பற்றி விட்டதாக சிரியா ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com