தலைமன்னார்-தனுஷ்கோடி கடல் பகுதியை 12 மணி நேரத்தில் நீந்தி கடந்த ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு

இலங்கை தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடல் பகுதியை 12 மணி நேரத்தில் தமிழக ரெயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீசாருடன் குழுவாக நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.
ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு
ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு
Published on

ராமேசுவரம்:

தமிழக ரெயில்வேயின் ஏ.டி.ஜி.பி.யாக உள்ள சைலேந்திரபாபு, இலங்கை தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் நீந்தி வர திட்டமிட்டு நேற்று முன்தினம் தமிழக போலீசார் 15 பேர் மற்றும் மீனவர்களுடன் தலைமன்னார் புறப்பட்டு சென்றார்.

பின்னர் தலைமன்னார் ஊர்மலை பகுதியில் இருந்து நேற்று அதிகாலை நீந்த தொடங்கிய அவர் நேற்று மதியம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு வந்து சேர்ந்தார்.

29 கிலோ மீட்டர் தூரத்தை சரியாக 12 மணி நேரம் 14 நிமிடத்தில் கடந்து சாதனை புரிந்தார். மேலும் ஏ.டி.ஜி.பி.யுடன் தமிழக போலீசார் 9 பேரும் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நீந்தி வந்தனர். ஏ.டி.ஜி.பி.யை கலெக்டர் நடராஜன் உள்ளிட்டோர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இதுபற்றி ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது:-

பகலில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை வந்தடைந்தோம். இலங்கை தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே 29 கிலோ மீட்டர் தூரத்தை குழுவாக பாக்நீரிணையை நீந்தி வந்துள்ளது இதுவே முதல் முறையாகும். தலைமன்னார் பகுதியில் இருந்து புறப்பட்டு தனுஷ்கோடி பகுதியை அடையும் வரையிலும் கடல் கொந்தளிப்பாகவும், அலைகள் வேகமாகவும் இருந்ததால் நீந்துவதற்கு மிகவும் சிரமப்பட்டோம்.

இதுதவிர ஜெல்லி மீன்கள் அதிகமாக இருந்ததாலும் நீந்துவதற்கு சிரமமாக இருந்தது. இந்த சாதனை தனி மனிதராக நான் செய்யவில்லை. இந்த பாக்நீரிணையில் ஒரு குழுவாக நீந்தி வந்தது இதுவே முதல் முறையாக இருக்கும்.

மற்ற கடலை விட இந்த கடலில் விஷத்தன்மை கொண்ட பாம்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவற்றை யாரும் பார்க்கவில்லை. தமிழகத்தில் உள்ள இளைஞர்களும், மாணவர்களும் நீச்சல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்பதில் மிகுந்த ஆர்வம் காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com