

இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் கர்நாடகா - பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. கவுதம் 36 ரன்னும், ஜோஷி அவுட்டாகாமல் 40 ரன்னும் அடித்தனர். பஞ்சாப் அணியின் பால்தேஜ் சிங் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டையில் முடிந்தது. தொடக்க வீரர் மந்தீப் சிங் 45 ரன்னும், ஹர்பஜன் சிங் 33 ரன்னும் எடுத்தனர்.