

அமெரிக்காவில் வசித்து வந்த சீக்கியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அமெரிக்காவிற்கான இந்திய தூதரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
சீக்கியர் கொலை செய்யப்பட்டது குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் ட்விட்டரில் எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி சுஷ்மா பதில் அளித்துள்ளார்.
அதில், 'சீக்கியர் கொலை செய்யப்பட்டது குறித்து அமெரிக்காவிற்கான இந்திய தூதர் நவ்தெஜ் எஸ் சர்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் அனைத்து இந்தியர்களை பாதுகாக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளோம்', என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.