பெண்களுக்கான ஹெப்டதலான் போட்டியில் இந்திய வீராங்கனை சுவப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்றார்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் பெண்களுக்கான ஹெப்டதலான் போட்டியில் இந்திய வீராங்கனை சுவப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
பெண்களுக்கான ஹெப்டதலான் போட்டியில் இந்திய வீராங்கனை சுவப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்றார்
Published on

புவனேஸ்வர்: 

புவனேவரில் நடைபெற்று வரும் ஆசிய தடகள போட்டிகளின் பெண்களுக்கான ஹெப்டதலான் போட்டியில் இந்தியாவின் சுவப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் 5942 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தார்.

இதே போட்டியில் இந்தியாவின் பூர்னிமா ஹெம்பிரம் 5798 புள்ளிகளுடன் முன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை தட்டிச்சென்றார். நான்காவது இடத்தை இந்தியாவின் லிக்சி ஜோசப் பிடித்தார்.

                                                              பூர்னிமா

கடைசி நாளான இன்று, இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. பதக்கப்பட்டியலில் 9 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கல என மொத்தம் 24 பதக்கங்களுடன் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com