

வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பொன்னூர் மலை அடிவாரத்தில் முனி சுக்கிர பகவான் ஜெயின் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் பிரதான கேட் உள்பட 3 கிரில் கதவுகள் உடைக்கப்பட்டு கோவில் உள்ளே இருந்த பித்தளை சிலைகள் 6 அங்குலம் உயரம் மற்றும் 7 அங்குலம் உயரம் கொண்ட 2 ஜெயின் சாமி சிலைகளும், 2 பீடம், 2 எந்திர உலோக பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருடுபோன 2 சிலைகளின் மதிப்பு சுமார் ரூ.20 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமி சிலைகளை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.