இந்தியா பகல்-இரவு டெஸ்டிற்கு சம்மதம் தெரிவிக்கும்; ஆஸ்திரேலியா நம்பிக்கை

இந்தியா அடுத்த முறையை ஆஸ்திரேலியா வரும்போது பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக விளையாடும் என ஆஸ்திரேலியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Published on

பாரம்பரியமான டெஸ்ட் போட்டி அழிந்துவிடக் கூடாது என்பதில் முன்னணி கிரிக்கெட் அணிகள் விரும்புகிறது. ஐந்து நாட்கள் செலவழித்து தற்போது போட்டியை ரசிகர்கள் பார்க்க விரும்பாததால், பகல் - இரவு போட்டியாக நடத்த ஆலோசிக்கப்பட்டது.

பகல் - இரவு போட்டியாக நடத்தினால் வேலை முடிந்தபின்னர், ரசிகர்கள் மைதானம் வந்து போட்டியை காணலாம் என்பதால், முதன்முதலாக ஆஸ்திரேலியா பகல் -  இரவு டெஸ்ட் போட்டியை நடத்த முயற்சி எடுத்தது. பல்வேறு சோதனைகளுக்குப் பிற கடந்த 201516-ல் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிக அளவில் இருந்து.

அதன்பின் பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டன. ஆனால் இந்தியா மட்டும் இன்னும் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com