சுத்தமல்லி அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேர் கைது

சுத்தமல்லி அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுத்தமல்லி அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேர் கைது
Published on

நெல்லை:

நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே குன்னத்தூர் சுவாமிநாதபுரம் பகுதியில் சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் விஜய்குமார் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார்பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் குன்னத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பதும் திருட்டுத்தனமாக மது விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 11 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் நரசிங்கநல்லூர் இந்திரா காலனி அருகே ரோந்து சென்ற போலீசார் அப்பகுதியில் திருட்டுதனமாக மது விற்று கொண்டிருந்த மாரியப்பனை(48) போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com