நைஜீரியா: போகோ ஹராம் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இயங்கி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி பலியாகினர்.
நைஜீரியா: போகோ ஹராம் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி
Published on

நைஜர்:

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இயங்கி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி பலியாகினர்.

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் குழு இயங்கி வருகின்றது. நைஜீரியா மட்டுமல்லாது அண்டை நாடுகளிலும் இந்த குழு பல்வேறு தாக்குதல்களை நடத்தி உள்ளது. இந்நிலையில், நைஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மைதுகுரி பகுதியில் உள்ள மார்கெட்டில் நேற்று இரண்டு தீவிரவாதிகள் தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தனர்.

இந்த கோர தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர். 48 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளி மாணவிகள் கடத்தப்பட்ட வீடியோவை இந்த இயக்கம் நேற்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com