இத்தாலி: காரில் வந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் கைது

இத்தாலி நாட்டின் மையப்பகுதியில் இன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
இத்தாலி: காரில் வந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் கைது
Published on

ரோம்:

இத்தாலி நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது மாகெரெட்ட்டா மாகாணம். அங்குள்ள மாகெரெட்டா பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் இன்று சுற்றுலா சென்றனர்.

அந்த சமயத்தில், அந்த பகுதிக்கு காரில் வந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தார்.

இந்த திடீர் தாக்குதலில் ஆறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com