இந்தியா சார்பில் செஷல்ஸ் நாட்டுக்கு இரண்டாவது டோர்னியர் விமானம் பரிசு

இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் டோர்னியர் விமானத்தை செஷல்ஸ் அதிபர் டேனி பயூரேவிற்கு பரிசாக அளித்தார். #Seychelles #SushmaSwaraj #DannyFaure
இந்தியா சார்பில் செஷல்ஸ் நாட்டுக்கு இரண்டாவது டோர்னியர் விமானம் பரிசு
Published on

புதுடெல்லி :

ஆறு நாள் அரசு முறை பயணமாக செஷல்ஸ் அதிபர் டேனி பயூரே இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ராம் நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் அவரை நேற்று வரவேற்றனர். அதைத்தொடர்ந்து, பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்துவது தொடர்பாக டேனி பயூரே - மோடி விவாதித்தனர்.

சந்திப்பின் முடிவில் இருநாடுகளுக்கு இடையே சில துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி செஷல்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டுக்கு டோர்னியர் விமானத்தை  பரிசாக வழங்க முடிவு செய்யப்படிருந்தது.

இந்நிலையில், டெல்லி பாலம் விமான நிலையத்தில் டேனி பயூரேவிற்கு இந்தியா சார்பில் டோர்னியர் விமானத்தை வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் பரிசாக அளித்தார்.  வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

டோர்னியர் விமானம், கடற்கரை பகுதிகளில் ரோந்து அல்லது அச்சுறுத்தல்களை கண்காணிக்கும் திறன் உடையது. ஏற்கெனவே செஷல்ஸ் நாட்டிற்கு ஒரு டோர்னியர் விமானம் உள்பட இரண்டு ஹெலிகாப்டர்களை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Seychelles #SushmaSwaraj #DannyFaure

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com