உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடருக்கான தேர்வுத் தொடரில் பங்கேற்பேன்: சுஷில் குமார்

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரரான சுஷில் குமார் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான தேர்வுத் தொடரில் பங்கேற்பேன் என்று சுஷில் குமார் தெரிவித்துள்ளார்.
சுஷில் குமார்
சுஷில் குமார்
Published on

உலகச் சாம்பியன்ஷிப்ஸ் மல்யுத்த போட்டி கஜகஸ்தானில் செப்டம்பர் 14-ந்தேதி நடக்கிறது. இதில் பங்கேற்க வேண்டுமானால் இந்திய வீரர்கள் தேர்வு போட்டியில் கலந்து கொண்டு திறமையை நிரூபிக்க வேண்டும். இதற்கான தேர்வு போட்டி வெள்ளிக்கிழமை (நாளை மறுநாள்) நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் இரண்டு முறை ஒலிம்பிக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சுஷில் குமார் காயம் காரணமாக பங்கேற்க இயலாது என்றார். இதனால் தேர்வு போட்டியை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைத்தது இந்திய மல்யுத்த பெடரேசன்.

ஆனால் 57 கிலோ, 65 கிலோ, 86 கிலோ, 97 கிலோ, 125 கிலோ எடைப் பிரிவுக்கு ஆட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. சுஷில் குமார் 74 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொள்ள இருக்கிறார்.

உலகக் கோப்பை சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் இருந்து 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆரம்பமாகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com