சுஷாந்த் சிங் மரண வழக்கு- ரியா சக்ரபோர்த்தி தந்தையிடம் சிபிஐ விசாரணை

சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக ரியா சக்ரபோர்த்தி தந்தையிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று 3-வது நாளாக விசாரணை நடத்தினர்.
ரியா சக்ரபோர்த்தி
ரியா சக்ரபோர்த்தி
Published on

மும்பை:

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். நடிகரின் மரணம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் சாந்தாகுருஸ் டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுஷாந்தின் மரணம் தொடர்பான தகவல் வெளிவரத் தொடங்கியதில் இருந்தே சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்திக்கு அதில் தொடர்பு இருப்பதாக சுஷாந்தின் தந்தை கே.கே. சிங் குற்றம்சாட்டி வந்தார். இது தொடர்பாக அவர் பீகார் காவல்துறையில் அளித்த புகாரின்பேரில் அந்த வழக்கு சிபிஐக்கு மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரியா சக்கரவர்த்தி குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ரியா சக்ரபோர்த்தி குடும்பத்தினர் ஒவ்வொருவராக சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ரியா சக்ரபோர்த்தியின் தந்தை இந்திரஜித் சக்ரபோர்த்தி கடந்த வாரம் ஒருமுறையும் நேற்று இரண்டாவது முறையும் விசாரிக்கப்பட்டார். இந்த நிலையில் ரியாவின் தந்தை இன்றும் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் காலை முதல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக ரியாவிடம் சனிக்கிழமை 7 மணி நேரமும், ஞாயிற்றுக்கிழமை 10 மணி நேரமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ரியாவின் சகோதரர் ஷோவிக் சக்ரபோர்த்தியிடம் நான்கு நாளாக விசாரணை நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com