வேலூர் ஜெயிலில் ரவுடி பினு உள்பட 6 பேரை சந்திக்க வருபவர்கள் தீவிர கண்காணிப்பு

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி பினு உட்பட 6 பேரையும் சந்திக்க வருபவர்களை சிறைக்காவலர்கள் தீவிரமாக கண்காணிக்க சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வேலூர் ஜெயிலில் ரவுடி பினு உள்பட 6 பேரை சந்திக்க வருபவர்கள் தீவிர கண்காணிப்பு
Published on

வேலூர்:

சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி பின்னி என்கிற பினு. இவர் சென்னையில் ரவுடிகள் புடைசூழ அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 70-க்கும் மேற்பட்ட ரவுடிகளை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.

மேலும் தப்பியோடிய ரவுடி பினுவை சுட்டுப்பிடிக்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து ரவுடி பினு போலீசில் சரணடைந்தார்.

இதில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் புழல் சிறையில் இருப்பதால் பாதுகாப்பு காரணம் கருதியும், வேறு ஏதேனும் குற்றங்களுக்கு திட்டம் போட வாய்ப்பிருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து புழல் சிறையில் இருந்த ரவுடி பினு உள்பட 6 பேர் நேற்று முன்தினம் வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டனர்.

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி பினு உட்பட 6 பேரையும் சந்திக்க வருபவர்களை சிறைக்காவலர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

ஜெயிலில் உள்ள மற்ற ரவுடிகள் யாராவது பினுவுடன் தொடர்பு கொள்ள முயல்வது குறித்தும் கண்காணிக்க வேண்டும்.

பினு மற்றும் கூட்டாளிகள் அடைக்கப்பட்டுள்ள ஜெயில் அறையில் விழிப்புடன் இருக்கவும் சிறைக்காவலர்களுக்கு சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com