ஆர்கே நகரில் ஆர்எஸ் ராஜேஷ் ஏற்பாட்டில் ரூ.18 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள்

ஆர்கே நகரில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்எஸ் ராஜேஷ் ஏற்பாட்டில் ரூ.18 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியமைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஆர்கே நகரில் ஆர்எஸ் ராஜேஷ் ஏற்பாட்டில் ரூ.18 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள்
Published on

ராயபுரம்:

வட சென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஏற்பாட்டில் ஆர்.கே.நகரில் 18 மீனவ கிராமங்களில் ரூ.18 லட்சம் செலவில் குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகிறது.

முதல் கட்டமாக ஆர்.கே. நகர் புதுமனைகுப்பம் மீனவ கிராமத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது. இந்த கேமரா இன்னும் முறைப்படி திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று புதுமனை குப்பத்திற்கு ஆட்டோவில் வந்த பெண் ஒருவர் தனது கைப்பை மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், ஆதார் கார்டு, ஏடிஎம் கார்டு போன்றவற்றையும் தவற விட்டுவிட்டார். அந்த பகுதியில் புதிதாக அமைக் கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் அந்த ஆட்டோ குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தது.

இதையொட்டி அ.தி.மு.க. பிரமுகர்கள் அந்த கண்காணிப்பு காட்சிகளை காவல் துறையிடம் அளித்தனர். போலீசார் சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவரை கண்டுபிடித்து தொலைந்த பொருட்களை மீட்டு அந்த பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

இதை தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷை சந்தித்து கண்காணிப்பு கேமரா பொருத்தியமைக்கு நன்றி தெரிவித்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com