புதிய ரெயில்வே திட்டத்திற்கு 3 நிமிடங்களில் ஒப்புதல் அளித்த மந்திரி

ஒரிசா மாநிலத்தில் புதிய ரெயில் வழித்தடத்திற்கு டுவிட்டர் மூலம் அம்மாநில முதல்வர் வைத்த கோரிக்கைக்கு 3 நிமிடங்களில் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு ஒப்புதல் அளித்துள்ளார்.
புதிய ரெயில்வே திட்டத்திற்கு 3 நிமிடங்களில் ஒப்புதல் அளித்த மந்திரி
Published on

ஒரிசா மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களான பூரி மற்றும் கோனாரக் இடையே புதிய ரெயில் வழித்தடம் அமைப்பதற்கான முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. இத்திட்டம் குறித்து அம்மாநில முதல்வர் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்திலிருந்து மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவின் டுவிட்டர் ஐ.டி.யை டேக் செய்து தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இத்திட்டத்திற்கு 3 நிமிடங்களில் ஒப்புதல் அளித்த சுரேஷ் பிரபு, எப்போது வேண்டுமானாலும் இத்திட்டத்தை கையெழுத்திடலாம் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இத்திட்டத்திற்கான நிதியில் மாநில அரசின் பங்கு 50 சதவிகிதம் இருக்கும் எனவும் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com