சுரண்டையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சுரண்டையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சுரண்டை:

சுரண்டை சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் செல்வம் மகள் சினேகா (வயது 25). பொறியியல் பட்டதாரியான இவர் வேலை தேடிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் சினேகாவுக்கு, அவரது தந்தை செல்வம் திருமண ஏற்பாடு செய்ததாக தெரிகிறது. இதனை அறிந்த சினேகா, தனக்கு வேலை கிடைத்தவுடன் திருமணத்தை பற்றி பேசலாம் என்று தந்தையிடம் கூறி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சினேகா, சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசார் விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com