சூரமங்கலத்தில் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

சேலம் சூரமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
Published on

சேலம்:

தேக்கம்பட்டி அருகே உள்ள தே.கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பூங்கான். இவருடைய மகன் கார்த்திக் (வயது 25). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தே.கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லலிதா (21). இவர் பி.எஸ்சி., முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால், கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில், லலிதாவின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி கார்த்திக்-லலிதா வீட்டை விட்டு வெளியேறி, கன்னியாகுமரியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நேற்று சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து மகளிர் போலீசார் இருவரின் பெற்றோரை அழைத்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com