மத்தியஸ்தம் செய்ய அனுமதி உண்டா? - அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு

அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண வழி உண்டா என்பது தொடர்பான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் இன்று வழங்குகிறது. #SupremeCourt #AyodhyaLand
மத்தியஸ்தம் செய்ய அனுமதி உண்டா? - அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு
Published on

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் இன்னும் விடை கிடைக்கவில்லை.

இது தொடர்பான வழக்கை அலகாபாத் ஐகோர்ட் விசாரித்து, வழக்கில் தொடர்புடைய சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வின் முன் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண வழி உண்டா என்ற கேள்வியை சுப்ரீம் கோர்ட் எழுப்பியது. இதை நிர்மோகி அகாரா தவிர்த்த பிற இந்து அமைப்புகள் எதிர்க்கின்றன. முஸ்லிம் அமைப்புகள் ஏற்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com