சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை வழக்கு: மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது நிலையில், மேல்முறையீட்டில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Published on

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தில் சுற்றுசூழல் முன் அனுமதி தரவில்லை என்று கூறி விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி இந்த திட்டத்திற்கு இடைக்காலத்தடை விதித்தது. மேலும் கையகப்படுத்திய நிலத்தை 8 வார காலத்திற்குள் திருப்பி அளிக்கவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து திட்ட மேலாளர் தலைமையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், தீர்ப்பு நாளை வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com