பி.எம். கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி

பிஎம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றுவதற்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்
Published on

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பெருந்தொற்றைச் சமாளிக்கும் நோக்கில் மத்திய அரசு பிஎம் கேர்ஸ் நிதியை உருவாக்கி உள்ளது. இதற்காக தனிநபர்கள், நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடையை, தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக் கோரி சிபிஐஎல் எனும் தொண்டு நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தது. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்திற்கு முரணாக பிஎம் கேர்ஸ் இருப்பதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவைடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, பிஎம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றுவதற்கு உத்தரவிட மறுத்த உச்ச நீதிபதிகள், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர். அத்துடன் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றுவது பொருத்தமானது என்று தோன்றினால் அரசு மாற்றலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com