பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் - சூப்பர் நோவாஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெலா சிட்டி அணியை வீழ்த்தி சூப்பர் நோவாஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் - சூப்பர் நோவாஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது
Published on

ஜெய்ப்பூர்:

3 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலா சிட்டி அணியும், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணியும் மோதின.

‘டாஸ்’ ஜெயித்த சூப்பர் நோவாஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வெலா சிட்டி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது.

முதலில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 37 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

இறுதியில், சுஷ்மா வர்மா 40 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளார். இவருக்கு அமலியா கெர் ஒத்துழைப்பு கொடுத்து 36 ரன்னில் அவுட்டனார்.

பின்னர் 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் நோவாஸ் அணி ஆடியது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.

கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 51 ரன்னும், பிரியா புனியா 29 ரன்னும், ஜெமிமா ரோடிகஸ் 22 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

ஆட்ட நாயகியாக ஹர்மன் பிரீத் கவுரும், தொடர் நாயகியாக ஜெமிமா ரோடிகசும் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com