ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு

கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
வார்னர் - ராகுல்
வார்னர் - ராகுல்
Published on

துபாய்:

ஐபிஎல் கிரிக்கெட்டின் 43-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் கிங்ஸ் வெவன் பஞ்சாப் அணியை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் பேட்டிங் செய்து வருகிறது. 2 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்துள்ளது.

பஞ்சாப் வீரர்கள் விவரம்:-

கேஎல் ராகுல் (கேப்டன்), மந்தீப் சிங், கிரிஸ் கெயில், நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, முருகன் அஸ்வின், கிரிஸ் ஜோர்டன், முகமது ஷமி, ரவி பிஷோனி, அஷ்தீப் சிங்

ஐதராபாத் வீரர்கள் விவரம்:-

டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பிரேஷ்டோவ், மணீஷ் பாண்டே, விஜய் சங்கர், பிரியம் ஹர், அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், கலீல் அகமது, சந்தீப் சர்மா, நடராஜன்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com