

ஜம்மு:
ஜம்மு காஷ்மீரில் உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமில் கடந்த மாதம் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் பலியாகினர். பாதுகாப்பு படையினர் கடும் சண்டையிட்டு முகாமுக்குள் புகுந்த தீவிரவாதிகள் மூவரை சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பொறுப்பேற்றது.
இந்நிலையில், அவந்திப்போரா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இன்று இணைந்து நடத்திய அதிரடி என்கவுண்டரில் சஞ்சுவான் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி முப்தி வாகர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் செயல்பாட்டு தளபதியாக இருக்கும் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கவாதியிடம் இருந்து வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். #Kashmir #TamilNews