பெல்கிரேடு சர்வதேச பாக்சிங்- இறுதிப் போட்டியில் 8 இந்திய வீரர்- வீராங்கனைகள்

செர்பியாவில் நடைபெற்று வரும் பெல்கிரேடு சர்வதேச பாக்சிங் தொடரில் சுமித் சங்வான், நிகத் ஜரீன் உள்பட 8 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். #SumitSangwan
பெல்கிரேடு சர்வதேச பாக்சிங்- இறுதிப் போட்டியில் 8 இந்திய வீரர்- வீராங்கனைகள்
Published on

ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற சுமித் சங்வான் (91 கிலோ எடைப்பிரிவு), முன்னாள் ஜூனியர் உலகச் சாம்பியன் வீராங்கனை நிகத் ஷரீன் (51 கிலோ எடைப்பிரிவு) ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இவர்களுடன் மேலும் ஹிமான்ஷு ஷர்மா (48 கிலோ), லால்டின்மாவியா (52 கிலோ) , வரிந்தர் சிங் (56 கிலோ), பவன் குமார் (69 கிலோ), ஜமுனா போரோ (54 கிலோ), லால்டே லால்ஃபேக்மெவிய் (81 கிலோவிற்கு மேல்) ஆகிய 6 பேரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இவர்களடன் மேலும் ஐந்து பேர் வெண்கல பதக்கத்திற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.


நிகத் ஜரீன்

சுமித் சங்வான் க்ரீஸ் நாட்டைச் சேர்ந்த வாக்கன் நானிட்சானியனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இறுதிப் போட்டியில் ஈகுவடாரைச் சேர்ந்த காஸ்டிலோ டோர்ரஸை எதிர்கொள்கிறார்.

நிகத் ஜரீன் செர்பியா வீரரை 3-0 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இறுதிப் போட்டியில் க்ரீஸ் வீராங்கனையை எதிர்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com