திருமணமாகி 2 வருடமாக குழந்தை இல்லாததால் இளம்பெண் தற்கொலை

கோவை சூலூர் அருகே திருமணமாகி 2 வருடமாக குழந்தை இல்லாததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணமாகி 2 வருடமாக குழந்தை இல்லாததால் இளம்பெண் தற்கொலை
Published on

கோவை:

கோவை சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் கலைவாணன். இவரது மனைவி பிரியா (வயது 20). இவர்கள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இதனால் மனவேதனை அடைந்த பிரியா வி‌ஷத்தை குடித்தார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு தென்னம்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று உடல் நலம் தேறிய பிரியா வீட்டுக்கு திரும்பினார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட பிரியாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 2 வருடத்தில் பிரியா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com