சூலூர் அருகே நிர்வாண நிலையில் கல்லுக்குழியில் ஆண் பிணம்

சூலூர் அருகே கல்லுக்குழிக்குள் நிர்வாண நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காயங்களுடன் பிணமாக மிதந்தார்.
சூலூர் அருகே நிர்வாண நிலையில் கல்லுக்குழியில் ஆண் பிணம்
Published on

சூலூர்:

கோவை சூலூர் அருகே உள்ள கள்ளப்பாளையம்- பீடம்பள்ளி இடையே கல்லுக்குழி உள்ளது. இந்த கல்லுக்குழிக்குள் நிர்வாண நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காயங்களுடன் பிணமாக மிதந்தார்.

இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துகல்லுக்குழிக்குள் இறந்து கிடந்த வாலிபர் யார்? அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com