சுல்தான்பேட்டை அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

சுல்தான்பேட்டை அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சுல்தான்பேட்டை:

சுல்தான்பேட்டை அருகே எஸ்.குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 80).இவர், அங்கு தனது மகன் பழனிசாமியுடன் வசித்து வந்தார். வயது மூப்பு மற்றும்பல்வேறு நோய் தாக்கம் ஆகியவையால் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் அவதி அடைந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அனைவருடன் சேர்ந்து லட்சுமி உணவருந்தினார். நேற்று காலை வீட்டில் லட்சுமியை காணாமல் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால், அவர் உடல்நலக்குறைவால் ஏற்பட்ட விரக்திகாரணமாக வீட்டு அருகே உள்ள கிணற்றில் குதித்துதற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்த சுல்தான்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டு, விசாரணைமேற்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com