

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, அயர்லாந்து, மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்று விளையாடும் சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் மலேசியாவில் உள்ள இபோ நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா - அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் இந்தியா 2-3 என தோல்வியடைந்தது.
இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஷிலானந்த் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் நீண்ட நேரம் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. போட்டி நிறைவடைவதற்கு 8 நிமிடத்திற்கு முன் இங்கிலாந்து வீரர் மார்க் கிளேக்கோர்ன் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. போட்டி டிராவில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைத்தன.
இந்தியா செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலியாவையும், புதன்கிழமை மலேசியாவையும், வெள்ளிக்கிழமை அயர்லாந்தையும் எதிர்கொள்கிறது. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். #AzlanShahCup #INDvENG