தேனி அருகே மாணவி உள்பட 2 பெண்கள் தற்கொலை

தேனி அருகே மாணவி உள்பட 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஆண்டிப்பட்டி:

தேனி அருகே ஆண்டிப்பட்டி ஆசாரிபட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 46). கூலித் தொழிலாளி. இவரது மகள் பிரியா (வயது 21). ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு டைப் ரைட்டிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்வி கட்டணம் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும் என தந்தையிடம் கேட்டுள்ளார்.

அதற்கு மணிகண்டன் தற்போது பணம் இல்லை. ஓரிரு நாளில் தருவதாக கூறியுள்ளார். மேலும் அவசரம் என்றால் தாயின் நகையை அடகு வைப்பதாகும் தெரிவித்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த பிரியா பெற்றோர் வெளியே சென்ற சமயத்தில் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது உறவினர்கள் மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்த போது மகள் பிணமாக தொங்கியதைக் கண்டு கதறி அழுதார். இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடைப்பட்டி நந்தகோபால் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி விஷ்ணு பிரியா (வயது 32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சிவக்குமார் ஒட்டன்சத்திரத்தில் உள்ள கல்லூரியில் பணியாற்றி வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று விஷ்ணு பிரியா வி‌ஷம் குடித்து சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com