

ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்கனி. இவரது மகள் நந்தினி (வயது 20). இவர் கொண்டையம்பட்டியில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நந்தினி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை போலீசுக்கு தெரிவிக்காமல் நந்தினியின் உடலை உறவினர்கள் எரித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த இலந்தைகுளம் கிராம நிர்வாக அதிகாரி சுந்தர்ராஜ் நத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
தற்கொலை செய்த பெண்ணின் உடலை போலீசுக்கு தெரிவிக்காமல் எரித்ததாக உறவினர்கள் குருசாமி, முத்தையா, ரவி உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நந்தினி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews