திருமணம் தடைபட்டதால் வி‌ஷம் குடித்த போலீஸ்காரர் தற்கொலை

நெல்லையில் திருமணம் தடைபட்டதால் போலீஸ்காரர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நெல்லை:

குமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஜெப ஸ்டீபன் (வயது28). இவர் நெல்லை ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து நிச்சயம் செய்யப்பட்டது. இந்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென்று திருமணம் நின்று போனது. மணமகள் வீட்டினர் நிச்சய தார்த்தத்தை ரத்து செய்து விட்டதாக கூறினார்கள்.

இதனால் பாளை ஆயுதப்படை குடியிருப்பில் தங்கி இருந்த ஜெபஸ்டீபன் மனம் உடைந்தார். கடந்த வாரம் அவர் திடீரென்று வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்த மற்ற போலீஸ்காரர் கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com